கார் விபத்து தொடர்பாக புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது!

Date:

கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைஸலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் இன்று (14) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர்  விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தின் சாரதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...