துருக்கியில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கோட்டா அதிகரிக்கப்படும்: துருக்கி தூதுவர்

Date:

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என துருக்கி தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு துருக்கி குடியரசின் பாராட்டுகளைத் தெரிவித்த தூதுவர், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

மேலும், கல்வி, சுகாதாரம், விவசாயத்தை உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு துருக்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும், எதிர்காலத்தில் அதற்கான பல ஒப்பந்தங்கள் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

மேலும், துருக்கியில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைப்பரிசில் கோட்டா 25 புலமைப்பரிசிலாக அதிகரிக்கப்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

துருக்கி தூதரக தூதுக்குழுவின் பிரதி பிரதானி மர்வே கோட்ஸே ஒட்லு (Merve Gözde Otlu) உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...