லெபனானில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி

Date:

லெபனானில்  இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார்.

முகமது ஷாஹின் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. பணயக் கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

அதேவேளை, இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. மேலும், லெபனானுக்குள் தங்கள் படைகளை இஸ்ரேல் நிலைநிறுத்தியுள்ளது. இந்த போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் லெபானானில் இருந்து இஸ்ரேல் படைகள்  திரும்பப்பெறப்பட உள்ளது.

ஆனாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனானின் எல்லையோர கிராமங்களில் சில பகுதிகளில் இஸ்ரேல் படைகளை முழுமையாக திரும்பப்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹில்புல்லா  மற்றும் ஹமாஸ்  குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

டெல் அவிவ் மற்றும் ஹிஸ்புல்லா இடையே பல மாதங்களாக நடந்த பரஸ்பர ஷெல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் நேற்று தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் தனது படைகளை திரும்பப் பெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...