Update: நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபரை கைது செய்ய தீவிரம்

Date:

கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி போன்று வேடமணிந்து வந்த சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் அரச ஆரம்ப கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...