சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.