தாதியர் சேவைக்கு பாரிய அநீதி: நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தாதியர்களின் போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று வியாழக்கிழமை (27) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றையதினம் மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில்  யாழ்ப்பாணம், வவுனியா,மட்டக்களப்பு, கிளிநொச்சி மாவட்ட  வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது அரசே தாதியர்களிற்கு பட்ஜெட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு , 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்து ஏன்? போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் புதிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...