ஏழு மனித புதைகுழிகளை ஆதாரமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் ,செய்மதி புகைப்படங்கள், ஜனாதிபதி அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான மெசேவில் உள்ள இராணுவவிமானதளத்தில் மீட்கப்பட்ட படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மனித புதைகுழிகளை அடையாளம் கண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சில மனித புதைகுழிகள் விமானநிலையத்திற்குள் உள்ளன ஏனைய மனித புதைகுழிகள் தலைநகரின் புறநகர்பகுதிகளில் உள்ளன என சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திலும் மயானமொன்றிலும் உள்ள இரண்டு இடங்களில் நீண்ட புதைகுழிகள் வெட்டப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன இவை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் பொருந்துகின்றன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஷாடி கரோன் தானும் இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தமைக்காக 2011 முதல் 12வரை பல மாதங்கள் இந்தசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.