கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் குவைத் கட்டிடத்தின் நிர்மாணப் பணியின் தொடக்க விழா இன்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த கட்டடத்திற்கான நிர்மாணப்பணிக்காக, பாடசாலையின் நலன்புரிக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிடுகு விற்பனை நடத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான நிதி திரட்டப்பட்டது. இதனூடாக கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு, இன்று கட்டடப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்விழாவில் களனி – கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம். தௌசீர், கம்பஹா வலய ஆசிரிய ஆலோசகர்கள், கிடுகுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.