சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்..

Date:

சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை, புனித நோன்பு ஆரம்பமாகும் என, சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பிறை தெரிந்ததையடுத்து, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமழான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.

( ஐ.ஏ. காதிர்கான் )

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...