நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை:எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றில் விளக்கம்

Date:

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று (28) இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்நிலையில் எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் ஆரம்பமாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது போன்றதொரு பின்னணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...