எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய சூத்திரத்திற்கு இணக்கம்

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்திற்கு எரிபொருள்ள விநியோகஸ்தர்கள் தங்களது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போது (04) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய சூத்திரத்தை செயல்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதன்படி புதிய சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், விநியோகஸ்தர்களின் யோசனைகள் குறித்து ஆராய எதிர்வரும் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் கொள்வனவாளர்களும் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை குறித்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் மார்ச் 18ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் தற்போது எரிபொருள் தொடர்பான பிரச்சினை இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய கூட்டுத் தாபன எரிபொருள் விநியோகஸ்தர்கள் இதுவரை பெற்று வந்த மேலதிக 3% கமிஷன் பணத்தை இடைநிறுத்தியமை தொடர்பில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகியதால் கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...