எகிப்து முன்வைத்த காசா மீள்நிர்மாணத் திட்டம்: அரபு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல்

Date:

காசாவை மீள்நிர்மாணம் செய்ய எகிப்து முன்வைத்த மாற்றுத் திட்டத்தை அரபு நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

53 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்தத் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் “Middle East Riviera” திட்டத்துக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

பலஸ்தீன எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பலஸ்தீன அதிகாரசபை காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது.

மேலும் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வொஷிங்டனில் இருந்த பலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய ட்ரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை ‘கையகப்படுத்தி’ அதை ‘மத்திய கிழக்கின் ரிவியரா’வாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மேலும், பலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது.

கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது. முன்னதாக ட்ரம்ப்பின் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

உச்சிமாநாட்டின் நிறைவில், ‘விரிவான அரபுத் திட்டம்’ ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...