மின்சார சபை நட்டமடையக் கூடிய சாத்தியம்: மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு IMF அதிகாரி பரிந்துரை

Date:

இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது.

இந்தநிலையில், குறித்த திருத்தத்தினால் மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக பீட்டர் புவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு சுமையாக அமையக் கூடும் எனவும் பீட்டர் புவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலை பொறிமுறைமையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பீட்டர் புவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...