சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் நேற்று ( 11) கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்க ஹ்தானி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர அவர்களும்,தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் அவர்களும் இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஏனைய அமைச்சர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள், இலங்கைக்கான பிற நாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.