இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

Date:

இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும், 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையாதல் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...