தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) 01/2024ம் சட்ட ஏற்பாட்டிற்கமைய புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நீதியமைச்சில் இடம்பெற்றது.
நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் தலைவராக பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, வணக்கத்திற்குரிய ஓமரே புன்னஸிரீ தேரர் , அருட்தந்தை கிரேஸியன் காப்ரியேல் அன்டோனிடோ அருள்ராஜ் குரோஸ், பேராசிரியர் டபிள்யூ. ஏ.டீ. ஷேர்லி லால் கிரிகோரி விஜேசிங்க, பேராசிரியர் பரீனா ருஸைக், கலாநிதி மனோஜி ஹரிஸ் ஷந்தர, சுசித் அபேவிக்கிரம, ஹாஷிம் ஸாலிஹ் ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் கலாநிதி விஜித் ரோஹன் பெர்னாண்டோ அவர்களும் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.