இன்று ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை: பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல் |

Date:

நாடாளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாக உள்ளது.

பரீட்சை எழுதுபவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையை தேர்வுக்கு எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் தேர்வு எழுதும் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் உங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

நுழைவுச் சீட்டு பரீட்சையின் முதல் நாளே சேகரிக்கப்படும். அது உங்களிடம் திருப்பித் தரப்படாது.

கூடுதலாக, தேர்வு எழுத பேனாக்கள் மற்றும் பென்சில்களை தேர்வு மையத்திற்கு கொண்டு வரலாம். வேறு எதையும் கொண்டு வர முடியாது. தேவைப்பட்டால், தண்ணீர் போத்தல்கள் கொண்டு வரலாம்.

குறிப்பாக, தேர்வுக்கு எடுத்துச் செல்வதற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்ட விடயங்களான போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது வேறு எதையும் கொண்டு வர வேண்டாம், தேர்வு எழுதுபவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருமாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் இரத்மலானை, தங்கல்ல, மாத்தறை, சிலாபம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மெகசின் சிறைச்சாலை, வட்டரக்க சுனீத வித்தியாலயம் ஆகியவற்றில் சிறைக் கைதிகளுக்காகவும் புனர்வாழ்வு பெற்று வரும் மாணவர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்காக பரீட்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் – அவர் தெரிவித்துள்ளார்.

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத வானிலையால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை அமுல்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ளது.

 நாடளாவிய ரீதியாக 3,663 மையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால், மாணவர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் பின்வரும் எண்களில் DMC-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

• DMC இன் துரித எண்: 117

• DMC இன் சிறப்பு கூட்டு அவசரகால செயல்பாட்டு அறை எண்கள்:

0113 668 020
0113 668 100
0113 668 013
0113 668 010
076 3 117 117

• பரீட்சைகள் திணைக்கள துரித எண்: 1911.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...