நாளை நாடு தழுவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Date:

நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளன.

மேலும், நோயாளர்களின் நலன் கருதி அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளின் போது சுகாதார ஊழியர்கள் கடமையில் ஈடுபட தயாராக உள்ளனர்.

இதேவேளை சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட விசேட தேவையுடைய வைத்தியசாலைகளில் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...