காசாவில் இடிபாடுகளிற்குள் இருந்து 25 நாள் பெண் குழந்தை உயிருடன் மீட்பு: இஸ்ரேலின் தாக்குதலில் பெற்றோர் பலி!

Date:

காசாவில்  கான் யூனிஸ் பகுதியில் சில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்  குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர்.

பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக சிதைவடைந்துள்ள நிலையில் மீட்பு பணியாளர்களிற்கு நம்பிக்கை ஒளியொன்று தென்பட்டது, குழந்தையொன்றின் மிக மெல்லிய அழுகையே அது.

திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ‘கடவுளே பெரியவன்’ என்ற குரல் எழுந்தது.

போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர் , அங்கு துணை மருத்துவபிரிவினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக் குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.

நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளை அந்த குழந்தை பிறந்து ஒரு மாதம். அதிகாலை குழந்தை  இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தாள். அவள் அழுவாள் பிறகு மௌனமாகி விடுவாள், நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது கடவுளுக்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை  சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு...

பராமரிப்பு வேலைக்கென 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு...

தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும்...