உலக காசநோய் தினம் இன்று: இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம்

Date:

2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த 9,180 காசநோயாளிகளில் 5,219 பேர் ஆண்கள் மற்றும் 3,259 பேர் பெண்கள் என்றும், 228 பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இருப்பினும்,  சமூகத்தில் சுமார் 4,000 – 5,000 கண்டறியப்படாத நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு காசநோய் நோயாளி 15 ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று ஏற்படுத்துகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உலகளவில், உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர் ஆண்டுதோறும் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் அவர்களில் சுமார் 10 மில்லியன் பேர்  காசநோயை உருவாக்குகிறார்கள்.

காசநோய் இன்னும் உலகின் மிகக் கொடிய நோயாகும், இது பாக்டீரியாவால் பரவுகிறது.

இந்த வருட உலக காசநோய் தினம் 2025 கொண்டாடுவதின் கருப்பொருள் “Yes! We Can End TB: Commit, Invest, Deliver” காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும் . உறுதிமொழி, முதலீடு அதை வழங்குதல் என்பதே ஆகும்.

அதன்படி, இன்று (24) காலை 08.30 மணிக்கு சுகாதாரப் பிரிவால் காசநோய் நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...