சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணாவுக்கு பயணத்தடை: பிரிட்டன் அறிவிப்பு

Date:

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ  தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் தடைகளை அறிவித்துள்ளது.

பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நேற்று தடைகளை விதித்துள்ளது.

முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான்  ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது,

பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரதூரமான உரிமை மீறல்கள்  துஸ்பிரயோங்களில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு  பொறுப்புக்கூறலைஉறுதி செய்வதும்,தண்டனையின் பிடியிலிருருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது,தேசிய ஐக்கியம் தொடர்பான அவர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டன் வரவேற்கின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் சிரேஸ்ட இராணுவதளபதிகள், பின்னர் கருணா குழு என்ற துணைப்படைக்கு தலைமை தாங்கிய விடுதலைப்புலிகளிற்கு எதிராக இலங்கை இராணுவத்தின் சார்பில் செயற்பட்டவர் உட்பட நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

போக்குவரத்து தடைகள்,சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் அடங்கியுள்ளன

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...