ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்..!

Date:

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம்  இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை  அனுபவிக்க முடியும்.

மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.

இந்த கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (24) அம்புலுவாவ திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் அம்புலுவாவ அறக்கட்டளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுராத ஜெயரத்னவை சந்தித்துள்ளார்.

இதன்போது, “இந்த திட்டம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்திருந்தது. ஒரு கனவாக வெகு தொலைவில் இருந்த இந்த திட்டம்  சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களால் நிஜமாகிவிட்டது.

நுவரெலியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கம்பளையில் பயணத்தை ஆரம்பித்து அம்புலுவாவவில் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில், கம்பளை ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு கேபிள் கார் சேவை விரிவுபடுத்தப்படும்,” என அநுராத ஜெயரத்ன சீனத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...