பலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பலஸ்தீன விடுதலைக்காக உழைப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் ‘சர்வதேச குத்ஸ்’ தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இம்முறை சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று இன்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை கொழும்பு வை.எம்.எம்.ஏ. தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் சுதந்திர பலஸ்தீன இயக்கம் ஆகியன ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வுக்கு பேச்சாளர்களாக ஈரான் தூதரகத்தில் முன்னாள் தூதரக அதிகாரியும், அரசியல் விவகாரங்கள் மற்றும் பொது இராஜதந்திரத் தலைவருமான இப்ராஹிம் மெஹ்ரைன், தர்மசக்தி அமைப்பின் தலைவர் அமரபுர பீடத்தின் மஹா நாயக்கர் கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர், அருட்தந்தை ஆசிரி பி.பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முக்கியப் பேச்சாளராக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்களும் கலந்துகொள்வார்.