ஞாயிறன்று உலகின் எப்பாகத்திலும் பெருநாள் வருவதற்கான சாத்தியம் இல்லை..!

Date:

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட  சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது

அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுவதால் சந்திரன், சூரியன் மறைய முன்னரே மறைந்துவிடும் என அது தெரிவித்துள்ளது.

வெற்றுக் கண்ணாலோ டெலஸ்கோப்பினாலே (Telescope) அல்லது வேறு எந்த வழியிலோ அன்றையதினம் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சவூதியின் வானியல் ஆய்வாளர் பத்ர் அல் உமைரா அவர்களும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ரமழான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 31 ஆம் திகதி திங்கட்கிழமையே பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைப்பிறை பார்க்கும் மாநாடு நடைபெறவிருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்று பிறை தென்பட்டால் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...