காசா படுகொலைகளை எதிர்த்து ஜம்இய்யதுல் உலமா கண்டன அறிக்கை!

Date:

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காசா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டித்துள்ளது.

பலஸ்தீன் காசா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை  எதிர்த்து ஜம்இய்யத்துல் உலமா கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலஸ்தீன் காஸா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்கள், வைத்தியசாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் மீது ஆக்கிரமிப்பு இராணுவம் நிகழ்த்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தொடர்ந்தும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈவிரக்கமின்றி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான, எவ்வித நியாயங்களும் கற்பிக்க முடியாத இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிப்பதோடு, இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு அப்பாவி உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறித்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...