போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்

Date:

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்த நிலையில் திடீரென லெபனானில் தாக்குதல் நடத்தி இருக்கிறது இஸ்ரேல்.

நவம்பர் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக மார்ச் 28ஆம் திகதி வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் உயிரை காத்துக் கொள்ள பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே கடந்த நவம்பர் முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பெய்ரூட் நகர் மீது முதன்முறையாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து சீறிப்பாய்ந்த ராக்கெட்டுகள் ட்ரோன்கள் வெடித்து சிதறியதில் பெய்ரூட்டின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தது.

எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அங்கு இரண்டு பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் அஞ்சப்படுகிறது. தாக்குதல் தொடர்பாக உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வடக்கு இஸ்ரலின் மீதான ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கை இது எனவும் இஸ்ரேல் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்ட சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

ஆனாலும் இஸ்ரேல் தங்கள் எந்த ஒரு பகுதியிலும் தாக்குதல் நடத்தவில்லை எனவும், லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தேவையற்ற ஒரு காரணத்தை தேடுவதாக குற்றம் சாட்டி உள்ளது.

அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக லெபனானில் அரசு பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது பிற வழிகளில் வெளியேறுவது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...