நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை.. (படங்கள்)

Date:

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (31) முஸ்லிம்கள் “ஈதுல் பித்ர் ” ரமழான் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் நோன்பு பெருநாள் தொழுகை பல இடங்களிலும் பல பிரதேசங்களிலும் சிறப்பாக  இடம்பெற்றது.

அம்பாறை
புனித நோன்பு பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின்   பல்வேறு  இடங்களில்  இன்று திங்கட்கிழமை (31)  சிறப்பாக நடைபெற்றன.அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

காத்தான்குடியில்
நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (31) காத்தான்குடி கடற்கரையில் இடம் பெற்றது. இதில் அஷ்ஷெய்க் செயினுலாப்தீன் மதனி பெருநாள் தொழுகையையையும், குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

வவுனியா
இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்று திங்கட்கிழமை (31) வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.

கொழும்பு – காலி முகத்திடல் 

மேமன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31)  காலி முகத்திடலில் நடைபெற்றன.

மன்னார் 

புனித நோன்பு பெருநாள் தொழுகை மன்னார் மாவட்டத்தில்   பல்வேறு  இடங்களில்  இன்று திங்கட்கிழமை (31)  சிறப்பாக நடைபெற்றது.

திருகோணமலை 
முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மைதானத்தில்நோன்பு பெருநாள் திடல் தொழுகையின் போது திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  பெருநாள் தொழுகையில் கலந்துக்கொண்டார்.

அக்கரைப்பற்று பொது மைதானம்

ஓட்டமாவடியில் ஜமாஅதே இஸ்லாமியின் ஏற்பாட்டில் பெருநாள் தொழுகை

தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி மவாட்டம், அக்குரணை கிளை ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் நோன்பு பெருநாள் தொழுகை

 

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப் பெருநாள் தொழுகை
 

செம்மண்ணோடையில் நோன்புப் பெருநாள் தொழுகை
 

புத்தளம் சாஹிரா கல்லூரியில்..

கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்…

கல்பிட்டியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது ஜாமீயுல் இஸ்லாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலில்

இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...