முழு காசா பிராந்தியமும் பட்டினியின் அகோரப் பிடியில் சிக்கியுள்ளது: ஹமாஸ் அறிவிப்பு

Date:

நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றான காசா பகுதி பஞ்சத்தின் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேலும் காசா பகுதியில் உள்ள எங்கள் மக்களுக்கு உடனடியாக கடவைகளைத் திறந்து தண்ணீர் உணவு, மருந்து மற்றும் நிவாரணங்களை  வழங்குமாறு நாங்கள் கோருகிறோம் என ஹமாஸ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை காசாவில் உள்ள பேக்கரிகள் மூடப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க சிரமப்படுகிறார்கள். இஸ்ரேலிய முற்றுகையால் சமையலுக்கு மா, எரிபொருள் இல்லை. இரண்டு வாரங்களில் உணவு தீர்ந்துவிடும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் காசாவுக்குள் செல்லும் அனைத்து மனிதாபிமான உதவிகளை துண்டித்ததால் உணவு நிலைமை ‘மிகவும் மோசமாக’ உள்ளது என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் அனைத்து உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் துண்டித்த பிறகு,விநியோகம் குறைந்து வருவதைக் காரணம் காட்டி, உலக உணவுத் திட்டம் காசாவில் மீதமுள்ள அனைத்து பேக்கரிகளையும் மூடியது.

மனிதாபிமான உதவி இல்லாததால், அதன் பொருட்கள் தீர்ந்து வருவதாகவும், ரொட்டி தயாரிக்கத் தேவையான கோதுமை மா இல்லை என்றும் கிடைக்கக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் விநியோகித்துள்ளதாகவும்  துரதிர்ஷ்டவசமாக கையிருப்பு இல்லை என்றும் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா. அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...