கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று (02) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இத்தீர்மானம் எடுக்கப்பபட்டுள்ளதாக, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான யோசனை அன்றையதினம நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.