உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் மோடி

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்விற்காக அவர் தமிழகம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியப் பிரதமர்  தனது ‘X’ கணக்கில், தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக பலத்தை சேர்க்கும் என்றும் இந்தியப் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...