ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்: பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

Date:

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலினால் இன்று காலை (07) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்  உயிருடன் எரிக்கப்பட்டார். இவர் ஒரு தந்தை மற்றும் பலஸ்தீன டுடே பத்திரிகையாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் பரவி வரும் வீடியோக்களில், தீயால் சூழப்பட்ட கூடாரத்தை அணைக்க பலஸ்தீனியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் போராடும் அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவம் பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகளை மீண்டும் முன்வைத்துள்ளது. சுதந்திர ஊடகத் தர்மத்திற்கு இது ஒரு பெரும் இடியென கூறப்படுகிறது.

ஊடகவியலாளர்கள்  தங்கியிருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸ் இஸ்ரேல் மீது 10 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதுடன், இஸ்ரேல் இராணுவம் இதற்கான தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் சூளுறைத்துள்ளது.

இதேவேளை, தைபேயில் உள்ள ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் கடையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட  ட்ரோன் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவம் இரண்டு முறை குண்டு வீசித்தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, செய்தி சேகரிக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான அணுகலை இஸ்ரேல் தடுத்து வருகிறது.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து, 210 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...