தேர்தலுக்கு பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக வக்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, சில மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது மஸ்ஜித்களையும் பதவிகளையும் அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகப்படுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திணைக்களம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து மஸ்ஜித் நம்பிக்கையாளர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்களில் மஸ்ஜித்களையும் அதன் சுற்றுச்சூழலையும், உடமைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், தங்களது நம்பிக்கையாளர் பதவிகளையும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஸ்ஜித் அல்லது நம்பிக்கையாளர் பதவிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்யும் நிலை ஏற்பட்டால், அதற்கு எதிராக வக்பு சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், உரிய ஆதாரங்களுடன் திணைக்களத்தின் கள உத்தியோகத்தர் ஊடாக முறைப்பாடு செய்யுமாறு  திணைக்களம்  கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் சமூக நலன் கருதியும் இதர பிரச்சினைகளை தவிர்க்கும் வகையிலும் அவர்கள் தற்காலிகமாக தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...