‘”காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும்; அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது’

Date:

“காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும். அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது. இஸ்ரேலை அச்சுறுத்தவும் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று கெய்ரோவில் எகிப்திய ஜனாதிபதி ஸீஸி உடனான ஊடக சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மெக்ரோன், எகிப்திற்குச் சென்றுள்ளார்.

இவ்விஜயத்தின் போது  காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக எகிப்தின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது,மார்ச் மாத நடுப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பின்னர், அந்தப் பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு பாரிய பின்னடைவு என்று மக்ரோன் சுட்டிக்காட்டினார்.

மேலும், பேச்சுவார்த்தைகள் எந்த தாமதமும் இல்லாமல், ஆக்கபூர்வமான முறையில் மீண்டும் தொடங்கப்பட வேண்டும், மேலும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான எகிப்தின் அயராத முயற்சிகளை நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.

ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்த இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையிலான முந்தைய போர் நிறுத்தத்தின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்களாக எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தாருடன் சேர்ந்து இருந்தன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...