அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில் பல தசாப்தங்களுக்கு பிறகு சவூதி பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு விஜயம்

Date:

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் பல ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

தெஹ்ரானில் நடந்த சந்திப்பின் போது சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் செய்தியை ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு தெரிவித்ததாக இளவரசர் காலித் குறிப்பிட்டார்.

“எங்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.

“ஈரான் குடியரசுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்பது எங்கள் நம்பிக்கை,” என்று நடந்த சந்திப்பில் கமேனி தெரிவித்தார்.

இளவரசர் காலித் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மற்றும் ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி முகமது பகேரியையும் சந்தித்தார்.

இதன்போது அங்கு அவர்கள் சவூதி-ஈரானிய உறவுகளை மதிப்பாய்வு செய்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விஜயம், சவூதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயமாகும்.

நவம்பர் 2024 இல், சவூதி அரேபிய ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் அல்-ருவைலி இருதரப்பு இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்காக தெஹ்ரானுக்கு விஜயம் செய்தார்.

சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு பிராந்திய சக்திகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மார்ச் 2023 இல் புதுப்பிக்கப்பட்டன.

2016 இல் ஷியா மதகுரு ஷேக் நிம்ர் அல்-நிம்ர் இன் தலைத்துண்டிப்புக்கு எதிரான  போராட்டங்களை  பயன்படுத்தி, சவூதி அரேபியா  ஈரானுடனான  அனைத்து இராஜாங்க உறவுகளையும் துண்டித்தது.  இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான தூதரகத் தொடர்புகளையும் துண்டித்திருந்தன.

இந்நிலையில்  ஈரான் சவூதி உறவுகள் ஏழு ஆண்டுகாலத்துக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை ஓமன் தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ரோம் நகரில் நடைபெறும் என்று இத்தாலி தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...