அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: இஸ்ரேலுக்கு விமான மார்க்கமாக அனுப்பியுள்ள குண்டுகள்

Date:

ஈரானிய அணு ஆயுதத்தை இல்லாமல் செய்வதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் ஈரானை தாக்குவதற்கு உதவியாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு விமான மார்க்கமாக அனுப்பி வைத்துள்ள குண்டுகளை இந்த படம் காண்பிக்கிறது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவ்வாறு தமக்கு தேவையான குண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய வானொலி உறுதிப்படுத்தியுள்ளது.

‘பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகள் மற்றும் பிற தற்காப்பு ஆயுதங்கள் நிரப்பிய ஒன்பது அமெரிக்க போக்குவரத்து விமானங்கள் டெல் அவிவ் அருகே உள்ள நெவடிம் விமான தளத்தில் தரையிறங்கின’ என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

‘வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,  அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் ஏற்படக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் டசன் கணக்கான அமெரிக்க சரக்கு விமானங்கள் இஸ்ரேலில் தரையிறங்கியதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேலில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்க THAAD வான் பாதுகாப்பு அமைப்புக்கான கனரக MK84 குண்டுகள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளை சுமந்து சென்றதாகவும் தெரிவித்தது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து வாஷிங்டனும் தெஹ்ரானும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த இராணுவ எச்சரிக்கை வந்துள்ளது. இருப்பினும், ஈரான் இதை நிராகரித்து, அதன் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக என்று கூறுகிறது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...