2024இன் 9ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது.

Date:

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச்  சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுகின்ற பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்  ரவி கருணாநாயக்க இந்த சட்டத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...