பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
பாப்பரசர் பிரான்சிஸ் இறுதி ஆராதனை 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.