கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவின் ‘இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பாரம்பரியம்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை, விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை இஸ்லாமியக் கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வு மன்றத் தலைவர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் பேராசிரியர் உதித்த கயஷான் குணசேகர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
கௌரவ அதிகளாக இ.ஒ.கூ. தா. முஸ்லிம் சேவை பணிப்பாளர் திருமதி எம்.ஜே.பாத்திமா ரினூஷியா, தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ். எம்.ஹனீபா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், விசேட அதிதிகளாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் பீட முன்னாள் தலைவர் கலாநிதி எம்.எஸ். எம்.அனஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூல்வெளியீட்டு நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக பிரபல அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அத்துடன், நூலின் முதல் பிரதியை சபுமல் பிரைவட் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் டபிள்யு. எம்.எம்.எஸ்.எம். கமால்தீன் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
நூல் விமர்சனத்தை தெற்காசிய ஒலிபரப்பு கொள்கை ஆய்வாளர், டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச அறக்கட்டளை (South Asian Broadcasting Policy Analyst, CEO, International Foundation for Digital Child) தலைவர் டாக்டர் எம்.சி. ரஸ்மின் (PhD) நிகழ்த்தவுள்ளார்.
மற்றும் சமூகத் தலைவர்கள் ஊடகம் சார்ந்தோர்கள், உலமாக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.