‘நாய்களும் முஸ்லிம்களும் உள்ளே நுழைய அனுமதியில்லை’: இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள வெறுப்புணர்வு சுவரொட்டி

Date:

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைசிறந்த வேளாண்மைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பிதான் சந்திர கிருஷி விஸ்வவித்யாலயாவின் வேளாண்மைப் பீடத்தின் நுழைவாயில் அறிவிப்புப் பலகையில் இஸ்லாமிய வெறுப்பையும், தரக்குறைவான கருத்துகளையும் தாங்கிய ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நாய்கள் மற்றும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைவரின் பார்வையும் பஹல்காம் மீதுதான். பயங்கரவாதம் என்பது இஸ்லாம்.’ இந்த தகவலை மாக்தூப் ஊடகம் உறுதி செய்துள்ளது.‌

பெயர் எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தால், இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர்களாலோ அல்லது பணியாளர்களாலோ கண்டறிய முடியவில்லை.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல மூலைகளிலும் பரவலான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் இந்தியா முழுவதிலுமிருந்து வந்த பல சுற்றுலாப் பயணிகள் இரண்டு வெளிநாட்டினர் மற்றும் ஒரு உள்ளூர் இளைஞர் அடங்குவர். இரு நாடுகளுக்கும் இடையே இப்போது நிலைமை பதற்றமாக உள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...