ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகைத்தந்த யாத்திரிகர்களின் கைவிடப்பட்ட பொதிகளை ஒப்படைக்க விசேட திட்டம்!

Date:

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை இன்னும் திருப்பி எடுத்துச் செல்லப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைப்பதற்காக சிவில் பாதுகாப்புத் துறையானது திட்ட முறையொன்றை  கொண்டுவரவுள்ளதாக மத்திய மாகாண சபையின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாத்திரிகர்களின் பொதிகளை உரிய முறையில் சேகரித்து, பின்னர், அவற்றை பாதுகாப்பாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்புத் துறை அதன் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தி வருகிறது.

எனினும், சில பொதிகள் மற்றும் ஏனைய உடைமைகள் இதுவரை எவராலும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டு காணப்படுகின்றன.

இவ்வாறு திருப்பி எடுக்கப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைக்க ஒரு முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் (28) நாளையும் (29) கண்டி ஏரியில் உள்ள ஜோய் படகுச் சேவைத்தளத்துக்கு முன்னால் கைவிடப்பட்ட பொதிகளை உரியவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தத்தமது பொதிகளை பெறாதவர்கள் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் இந்த இடத்துக்குச் சென்று தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்ளுமாறு சிவில் பாதுகாப்புத் துறை  கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பொதுமக்கள் அறியவும் பொதிகளை கையளிப்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும் 071-580 3000, 077-531 1797 மற்றும்  071-096 5890 ஆகிய தொலைபேசி இலக்கங்களை சிவில் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...