சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்; ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அதிர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மூத்த விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர் மாணவன் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த 2 வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...