பல தசாப்த கால மோதலுக்கு முற்றுப்புள்ளி: துருக்கியுடனான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட குர்திஷ் போராளிக் குழு தீர்மானம்..!

Date:

நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழு இன்று (12) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்தது.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) எடுத்த இந்த முடிவை, அந்தக் குழுவிற்கு நெருக்கமான ஊடக நிறுவனமான ஃபிரத் செய்தி நிறுவனம் அறிவித்தது.

அங்காராவுடனான ஒரு புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதத்தில்  1999 முதல் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள PKK தலைவர் அப்துல்லா ஓகலன், தனது குழுவை ஒரு மாநாட்டைக் கூட்டி முறையாகக் கலைக்க முடிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.

இத்தீர்மானம் 1980 களில் இருந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

மார்ச் 1 அன்று, PKK ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தது, ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது உட்பட நிபந்தனைகளை விதித்தது.

இந்தக் குழு 1984 முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியை வழிநடத்தி வந்ததடன்  போராட்டங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது. இதனால் துருக்கி மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் ஒரு பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்டது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், லெபனானில் ஹெஸ்பொல்லா குழுவின் போராட்டம் மற்றும் காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பிராந்தியத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களின் பின்னணியில் குர்திஸ்தான் கட்சியின்
அறிவிப்பு வந்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...