கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

Date:

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த 4 இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடி கொண்டிருந்தவேளை கடல் நீரினால் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், 17 வயதான உதயகுமார் ஸ்ரீதரன், 19 வயதான ஸ்ரீகாந்த் சரன்ராஜ், 18 வயதான ஸ்ரீகாந்த் அஜித்குமார் மற்றும் 27 வயதான யூசுப் வென்னப்புவ போலஸ்வத்த ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...