சுதந்திர பலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது: அமைச்சர் பிமல்

Date:

இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென முறித்துக் கொண்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இலங்கை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தத விடயத்தை தெரிவித்தார்.

இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால்,பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும்.எங்களால் இதனை செய்ய முடியாது.

சவூதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே  நாங்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம்.

பலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாங்கள் சுதந்திர  பலஸ்தீன தேசம் சுதந்திர இஸ்ரேல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம், இரண்டையும் வேறுவேறு அரசாங்கங்களாக நாங்கள் கருதுகின்றோம்,

இலங்கை சுதந்திர பலஸ்தீன தேசம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொலை செய்வதை கண்டிக்கின்றது.என்றார்

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...