சுகாதாரம், ஊடக பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சென்றுள்ள காரணத்தினால், அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்.

இந்த மாநாடு மே 19 முதல் 27 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. “சுகாதாரமான ஒரு உலகம்” என்பது இவ்வருடம் அதன் கருப்பொருளாகும்.

இந்த ஆண்டு மாநாட்டில் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்வதோ, அந்தந்த நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரின் பங்கேற்புடனும் ஒரு விரிவான கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதோடு, முன்வைக்கப்படும் திட்டங்கள், யோசனைகள் மற்றும் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், எதிர்வரும் ஆண்டுக்கான உலகம் முழுவதும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்படும். அதற்கேற்ப எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

 

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...