மாணவி அம்ஷிகாவின் தற்கொலை விவகாரம்: கல்லூரி அதிபருக்கு உடனடி இடமாற்றம்

Date:

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட  பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவி விடயத்தில் பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (19) காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், கொட்டாஞ்சேனையில் அண்மையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி அம்ஷிகாவிற்கு நீதி கோரி பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...