இளைய தலைமுறைக்கு கல்வியோடு வஹியின் வழிகாட்டலும் வழங்கப்பட வேண்டும் – பேராசிரியர் ராஸி

Date:

கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக களனிப் பல்கலைக்கழக போராசிரியர் கலாநிதி எம்.ஜே.எம். ராஸி கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், “அறிவு என்பது மனிதர்களிடம் காணப்படுகின்ற அறிவு, அருளப்பட்ட அறிவு என்று இரு வகையாக நோக்கப்படுகின்றது.

இன்றைய உலகில் மனித அறிவு மிக உச்சத்தை அடைந்திருக்கிறது. ஆனாலும் அத்தகைய அறிவு கொண்டவர்களாலேயே உலகம் அழிவை நோக்கியும் வழிநடத்தப்படுகின்றது. அத்தோடு அந்த அறிவு வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்குவதற்கும் தவறிவருகின்றது.

எனவே, அருளப்பட்ட அறிவு எனும் வஹியின் அறிவையும் சேர்த்து வழங்கப்படுவதே இன்றைய இளைய தலைமுறையின் தேவையாக உள்ளது.

மாணவர்களின் அடைவு என்பது அவர்கள் பெறும் புள்ளிகளைத் தாண்டி அவர்களது ஒழுக்கம், பண்பாடு, திறன்கள், ஆற்றல்கள் என்பவற்றையும் உள்ளடக்கியது என்பதை பெற்றார்களும் கற்பிப்போரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அத்தோடு, இன்றைய தலைமுறைக்கு உரித்தான, அவர்கள் விரும்புகின்ற வழிமுறையில் இவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஊர் மட்டத்தில் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இந்தப் பணியைச் செய்வதற்கு, கற்றவர்கள் தனவந்தர்கள் – நிறுவனங்கள் என்ற மூன்று தரப்பும் ஒன்றிணைவது அவசியமாகும்.

கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் இந்த விழாவில் இம்மூன்று தரப்பினரும் இணைந்து செயற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது” என அவர் தெரிவித்தார்.

மேற்படி பரிசளிப்பு விழாவில், கடந்த ரமழானில் கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனம், ஊர்ப் பாடசாலையான அலிகார் மகா வித்தியாலயம், அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானி பெரிய பள்ளிவாசல் என்பவற்றின் ஒத்துழைப்புடன் நடத்திய “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய, வெற்றியீட்டிய 165 மாணவ, மாணவிகளுக்கு பணப் பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கபட்டமைக் குறிப்பிடத்தக்கது.

“ரய்யான் அறிவுக்குப் பரிசு” போட்டியானது மாணவர்களின் வாசிப்பு மற்றும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஜஸ்ட் மீடியா பவுன்டேசன் நிறுவனத்தின் ரமழான் பருவ கால சஞ்சிகையான “ரய்யான்” சஞ்சிகையை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட எழுத்து மூலமான போட்டிப் பரீட்சையாகும்.

இப்போட்டியை அல்-அப்ரார் நிறுவனம் ஊர்ப் பாடசாலையான கள்-எலிய அலிகார் மகா வித்தியாலயத்துடன் இணைந்து நடத்தியது.

(அபூ மிஷாரி)

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...