மினாவில் இலங்கை ஹாஜிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் ஒரே இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 ஹாஜிகளும் மினாவில் வலயம் 2 இல் (Zone 2) தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் இருந்து சென்றுள்ள ஹஜ் குழு உறுப்பினர்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாஜிகள் தங்க வைக்கப்படவுள்ள இடங்களை இலங்கையில் இருந்து வந்த ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி TK அஸுர் , இலங்கை வக்பு சபை உறுப்பினர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SP )மாஹில் டூல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி ஏ.எஸ்.எம்.ஜாவித், சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் திருமதி மபுஷா லாபிர் , ஏற்பாடுகளுக்கான தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) சென்று பார்வையிட்டனர்.

ஹாஜிகளின் உணவு விநியோக ஏற்பாடுகளுக்கு பொறுப்பான ஜலால்டீன் ஹாஜி உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

(தகவல் மினாவிலிருந்து ASM ஜாவித்)

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...