குற்ற செயல்களுக்கான காரணங்களை கண்டறிய விசேட திட்டம்!

Date:

அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆய்வு நடவடிக்கையின் பின்னர் அவ்வாறான குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...