இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய எதிர்ப்பு: இஸ்ரேலிய விளையாட்டு மைதானத்தில் இறைத்தூதருக்கு எதிரான கோஷம்

Date:

இஸ்ரேலில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, இறைத்தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அவமதிக்கும் வகையில் ரசிகர்கள் “முஹம்மத் இறந்துவிட்டார்” எனும் கோஷங்களை உரத்துரைத்து முழங்கிய வீடியோ காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இஸ்ரேலிய உதைப்பந்தாட்ட கிண்ணத்துக்கான  முக்கியமான ஆட்டத்தின் போது நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கோஷங்கள் இஸ்ரேலிய மொழியில் முழங்கப்பட்ட போதும், அதன் பொருள் அனைத்தையும் புரிந்துகொண்ட உலகின் முஸ்லிம் மக்கள் இதனை மிகுந்த வேதனையுடனும் கோபத்துடனும் எதிர்கொண்டுள்ளனர்.

முஸ்லிம்ளுக்கு எதிரான உணர்வலைகள் எல்லைமீறி முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கின்ற இறைத்தூதர் அவர்களையே விட்டுவைக்காத வகையில் இந்நிலைமை எல்லைத்தாண்டி சென்றிருக்கிறது மிக வேதனையான விடயம்.

இத்தகைய செயற்பாடுகள், சமாதானத்தையும் சகவாழ்வையும்  அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தைப் பாதிக்கும் வகையிலும், மதங்களுக்கு இடையிலான நம்பிக்கையை சிதைக்கும் முறையிலும் இருக்கின்றன.

அதனால், சகல மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களும், சமூக நலவாளர்களும், பொதுமக்களும் இத்தகைய வெறுப்பான செயல்களை கண்டித்து, வன்முறைக்கும் மதவெறிக்கும் எதிராக ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

Popular

More like this
Related

நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய பகுதிகளில் மழை

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைகொள்ளும் என...

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...